Fines Victoria

Primary content

Download as a PDF fileஇந்தத் தகவல்கள் முக்கியமானவை. இந்தத் தகவல்கள் உங்களுக்கு விளங்காவிட்டால், அல்லது உங்களுடைய அபராதத்தினைப் பற்றி நீங்கள் யாருடனாவது பேச விரும்பினால், 'விக்டோரிய அபராதங்கள்' (Fines Victoria)-ஐ (03) 9200 8111 அல்லது 1300 369 819 (உள்ளக பிராந்தியப் பகுதிகளில் இருந்து அழைப்பவர்கள்)-இல் அழையுங்கள், நீங்கள் விரும்பும் மொழியில் யாராவதொருவருடன் உங்களுடன் பேச இயலுமாக இருக்கும்.

 

விக்டோரியன் அபராத விதிப்பு முறைமை

அபராதம் எனப்படுவது சட்டத்தினை மீறியதற்காக விதிக்கப்படும் ஒரு தண்டனையாகும். சட்டவிரோதமான நடத்தைகளைத் தடைசெய்வதன் மூலம் சமூகப் பாதுகாப்புக்கு உதவுவதும், பொது ஒழுங்கினை நிலை நிறுத்துவதுமே அபராதம் விதிப்பதன் நோக்கம் ஆகும்.

அத்துமீறல் அபராதங்கள் மற்றும் நீதிமன்ற அபராதங்கள் ஆகியன அபராதங்களின் பிரதான வகைகளாகும்.

  • உள்ளூர் மன்றங்கள் (கவுன்சில்) மற்றும் 'விக்டோரிய காவல்துறை' போன்ற சட்ட அமலாக்க முகவர்களால் அத்துமீறல் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. பொதுவாக, போக்குவரத்துக் குற்றங்கள் மற்றும் வாகனத்தரிப்புக் குற்றங்கள் போன்ற சாதாரண குற்றங்களுக்காக இந்த அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டிய, அல்லது குற்றத்தினை ஒப்புக்கொள்ளவேண்டிய தேவையில்லாமல் பணம் செலுத்துவதன் மூலமாகக் குற்றச்செயல் ஒன்றிற்கான பரிகாரத்தினை ஒருவர் தேடிக்கொள்ளஅத்துமீறல் அபராதம் அனுமதிக்கிறது.
  • நீதிபதி அல்லது நீதவான் ஒருவரால் நீதிமன்ற அபராதங்கள் நீதிமன்றில் விதிக்கப்படுகின்றன.

தண்டனைக்கான அபராதம் ஒன்றினை நீங்கள் பெற்றுக்கொண்டால்

உங்களுடைய தண்டனை அபராதம் குறித்து உடனடியாக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது முக்கியமாகும். நீங்கள் ஏதும் செய்யவில்லை என்றால், அபராதத் தொகை இன்னும் அதிகரித்துக் கூடிக்கொண்டுபோய் மிகவும் பாரதூரமாகிவிடும்.

உங்களுக்குள்ள விருப்பத் தெரிவுகள் இங்கே இருக்கின்றன:

அபராதத்தை இப்போதே செலுத்திவிடுங்கள் - உங்களுடைய அபராதத்தினை உடனடியாக இணையவழியில் செலுத்த fines.vic.gov.au எனும் வலைத்தலத்திற்குச் செல்லுங்கள்.

தவறாமல் செலுத்தப்படும் தவணைத் தொகைகள் மூலமாக அபராதத்தைச் செலுத்தி முடியுங்கள் - முழுத் தொகையையும் உங்களால் இப்போதே உடனடியாகச் செலுத்த இயலவில்லை என்றால், சிறு-சிறு தொகைகளாகச் செலுத்த உங்களை அனுமதிக்குமாறு நீங்கள் கேட்கலாம். செண்ட்டர்லிங்க்' உதவித்தொகைகளை நீங்கள் பெற்றுவந்தால், உங்களுடைய கொடுப்பனவுகளில் இருந்து இந்தத் தொகையை எடுத்துக்கொள்ளுமாறு நீங்கள் எம்மைக் கேட்கலாம். உங்களுடைய அபராதத்தினைத் தவணைகளில் செலுத்த online.fines.vic.gov.au/Pay-by-instalments எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் சென்று இதற்குரிய இணையவழிப் படிவத்தினை நிரப்புங்கள்.

அபராதத்தைச் செலுத்த இன்னும் அதிக காலம் வேண்டுமெனக் கேளுங்கள் - பணத்தைச் செலுத்துவதற்கான கால நீட்டிப்பு ஒன்றை வேண்ட, online.fines.vic.gov.au/Payment-extension எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் சென்று இதற்கான இணையவழிப் படிவத்தினை நிரப்புங்கள்.

வேறொருவர் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார் என்றால் - அத்துமீறல் அபராதம் உங்களுக்குக்குத் தபால் மூலமாக வந்தால், ஆனால் சொல்லப்பட்ட நேரத்தில் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தது நீங்கள் இல்லையானால், வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தவருடைய பெயரைக் குறிப்பிட்டு மொழிய உங்களால் இயலுமாக இருக்கலாம். இப்படிச் செய்தால், அபராதமானது உங்களுக்குப் பதிலாக அந்த நபருக்கு அனுப்பப்படும். வாகன ஓட்டுனர் யார் என்பதைக் குறிப்பிட்டு மொழிய online.fines.vic.gov.au/Nominate எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் சென்று இதற்கான இணையவழிப் படிவத்தினை நிரப்புங்கள். இந்தப் படிவம் ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த நீங்கள் இதைக் கூடிய விரைவில் செய்யவேண்டும்.

குடும்ப வன்முறையினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் - குடும்ப வன்முறைக்கு நீங்கள் ஆளானதன் காரணமாக உங்களுக்கு அத்துமீறல் அபராதம் வந்திருந்தால். 'குடும்ப வன்முறைத் திட்ட' (Family Violence Scheme) உதவிக்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலதிகத் தகவல்களுக்கு fines.vic.gov.au/fvs எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

வேலை செய்து உங்களுடைய அத்துமீறல் அபராதத்தினை நீங்கள் கட்டிமுடிக்க விரும்பினால், 'சீர்திருத்தப் பணி அனுமதித் திட்டம்' (Work and Development Permit Scheme) மூலம் கிடைக்கும் சில நடவடிக்கைகளிலும், சிகிச்சைமுறைகளிலும் பங்கேற்று உங்களுடைய அபராரத்தினை நீங்கள் செலுத்தி முடிக்கலாம். அனுகூலம் அற்ற மற்றும் பாதிப்புறும் நிலையில் நீங்கள் இருப்பீர்களேயானால், (வீடற்ற நிலை, மன நோய், குடும்பவன்முறை, மது மற்றும் போதை வஸ்திற்கு அடிமைப்பட்ட நிலை, அறிவுத்திறன் இயலாமை) இது உங்களுக்கு ஒரு தெரிவாக அமையலாம். மேலதிகத் தகவல்களுக்கு fines.vic.gov.au/fvs எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

இதற்கான புகைப்படத்தை நீங்கள் பார்க்க விரும்பினால் - வேகமீறல் அபராதங்கள் மற்றும் சிவப்புவிளக்கு அபராதங்கள் ஆகியவற்றிற்கான புகைப்படங்களை நாங்கள் எடுக்கிறோம். இந்தப் படத்தை வலையிறக்கம் செய்ய online.fines.vic.gov.au/View-image எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

உங்களுடைய அத்துமீறல் அபராதத்தினை நாங்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டுமென நீங்கள் விரும்பினால்

பின் வரும் தருணங்களில், உங்களுடைய அபராதத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டுமென உங்களால் கேட்க இயலும்:

  • உங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டுமென எடுக்கப்பட்ட முடிவு சட்டவிரோதமானது என்றும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கக்கூடாது என்றும் நீங்கள் நினைத்தால்
  • நீங்கள் தவறான காரியத்தைச் செய்துவிட்டீர்கள், ஆனால் அசாதாரணமான காரணம் ஒன்றை முன்னிட்டு நீங்கள் சட்டத்தினை மீறினீர்கள் என்ற தருணத்தில்
  • அபராதமானது உங்களுக்குத் தவறுதலாக விதிக்கப்ட்டிருக்கிறது, மற்றும் இந்த அபராதம் வேறொருவருக்கு விதிக்கப்பட்டிருக்கவேண்டும், உங்களுக்கல்ல என்ற தருணத்தில்
  • அபராதத்தினைப் பற்றி உங்களுக்குத் தெரியாது - அபராத அறிவிப்பு உங்களுக்கு அனுப்பப்படவில்லை, அல்லது அதிகாரி ஒருவரால் அது உங்களுக்குக் கையளிக்கப்படவில்லை எனும் தருணத்தில்
  • அசாதரனமான சூழல்களில் நீங்கள் இருந்தீர்கள் - வீடற்ற நிலை, மன நோய், குடும்பவன்முறை, மது மற்றும் போதை வஸ்திற்கு அடிமைப்பட்ட நிலை, அல்லது ஒரு அறிவுத்திறன் இயலாமை

இவற்றில் ஏதாவது ஒன்று செல்லுபடியாகும் என்றால், மீள்பரிசீலணை ஒன்று வேண்டுமென நீங்கள் கேட்கலாம். online.fines.vic.gov.au/Request-a-review எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் சென்று இதற்கான இணையவழிப் படிவத்தினை நிரப்புங்கள். நீங்கள் கூறுவதை நிரூபிப்பதற்கான ஆதாரத்தை நீங்கள் எமக்குக் கொடுக்கவேண்டியிருக்கும்.

குறிப்பு: நீதிமன்றத்தில் நீதிபதி அல்லது நீதவான் ஒருவர் உங்களுக்கு அபராதம் விதிக்கும் தருணத்தில் விசாரணையின்போது நீங்கள் நீதிமன்றத்தில் இருந்திருக்காவிட்டால், இதன் காரணமாக நீதிமன்ற முடிவு மீள்பரிசிலிக்கப்பட வேண்டுமென நீங்கள் விரும்பினால், அல்லது உங்களுக்கு வேறேதும் தெரிவுகள் உள்ளனவா என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் உங்களுக்கு மேலதிகத் தகவல்கள் வேண்டும் என்று நீங்கள் அந்த நீதிமன்றத்தைக் கேட்கலாம். நீதிமன்றத்துடன் தொடர்புகொள்வதற்கு முன்பாக சட்ட உதவியை நீங்கள் பெறுதல் நலம் - www.fclc.org.au எனும் வலைத்தலத்திற்குச் செல்லுங்கள், அல்லது உங்களுடைய உள்ளூர் சமூக சட்ட மையம் இருக்கும் இடத்தினைத் தெரிந்துகொள்ள (03) 9652 1500 எனும் இலக்கத்தினை அழையுங்கள்.

உங்களுடைய அபராதத்தினைப் பற்றி நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால்

அத்துமீறல் அபராதங்கள்
சட்ட அமலாக்க முகமையகம் ஒன்றினால் அத்துமீறல் அறிவித்தல் ஒன்று வெளியிடப்படும்போது, உரிய திகதிக்குள் நீங்கள் அதைக் கட்டாயமகச் செலுத்திவிடவேண்டும்.

அத்துமீறல் அறிவிப்பில் உள்ள அபராதம் ஒன்றை நீங்கள் செலுத்தவில்லை என்றால், அது ஒரு 'அபராத நினைவூட்டு அறிவிப்'(Penalty Reminder Notice)பாகஆகிவிடும். அபராதத் தொகை உயரும். நீங்கள் அபராதத்தினைச் செலுத்தவேண்டும், அல்லது உங்களுக்கு உள்ள தெரிவுகளைப் பற்றிப் பேச உங்களுக்கு அபராதம் விதித்த முகமையுடன் நீங்கள் தொடர்புகொள்ளவேண்டும். அறிவிப்பின் பின்புறம் அவர்களுடைய தொடர்பு இலக்கம் இருக்கும்.

இப்போதும் நீங்கள் அபராதத்தினைப் பற்றி எதுவும் செய்யவில்லை என்றால், அது ஒர் இறுதிக் கேட்பு அறிவிப்பு (Notice of Final Demand) ஆகிவிடும், மற்றும் அபராதத் தொகை இன்னும் உயரும். இந்த அபராதத் தொகையை நீங்கள் உரிய திகதிக்குள் செலுத்தவேண்டும், அல்லது fines.vic.gov.au/contact-us இல் எம்முடன் தொடர்புகொள்ளவும்.

உங்களுடைய அபராதத்தினைப் பற்றி நீங்கள் இப்போதும் எதுவும் செய்யவில்லை என்றால்

  • உங்களுடைய அனுமதிப்பத்திரம் அல்லது வாகனப் பதிவு இடைநிறுத்தம் செய்யப்படக்கூடும்
  • உங்களுடைய வங்கிக் கணக்கு அல்லது சம்பளத்தில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படலாம்
  • உங்கள் மீது 'எழுத்தாணை' (Warrant) ஒன்று பிறப்பிக்கப்படலாம், மற்றும் இதில் 'அமைதிக் காவலர்' (Sheriff) ஈடுபாடு கொள்ளக்கூடும். உதாரணத்திற்கு, அமைதிக் காவலர் உங்களுடைய வாகனத்தைக் கையகப்படுத்தி விற்கலாம்.

நீதிமன்ற அபராதங்கள்
நீதிபதி அல்லது நீதவான் நீதிமன்றத்தில் உங்களுக்கு அபராதம் விதித்தால் அது 'நீதிமன்ற அபராதம்' என்று சொல்லப்படும். நீதிமன்ற விசாரணை நடைபெறும் நாளன்று நீங்கள் உங்களுடைய அபராதத்தினைச் செலுத்தவில்லை என்றால், 'நீதிமன்ற அபராத வசூலிப்புக் கூற்று' (Court Fine Collection Statement (CFCS)) ஒன்றை 'விக்டோரிய அபராதங்கள்' (Fines Victoria) உங்களுக்கு அனுப்பும். CFCS ஒன்றை நீங்கள் பெறும்போது, அந்தக் கூற்றில் அட்டவணையிடப்பட்டுள்ள திகதி(களு)க்குள்ளாக நீங்கள் அபராதத் தொகையினைச் செலுத்தவேண்டும்.

அபராதத்தினைத் தவணைகளில் மெதுவாகக் கட்டி முடிக்கவோ, அபராதத்தினைச் செலுத்த இன்னும் அதிக காலம் வேண்டுமெனவோ நீங்கள் கேட்கலாம். அல்லது fines.vic.gov.au/contact-us எனும் வலைத்தலப் பக்கம் மூலமாக எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்.

உங்களுடைய CFCS-இல் உங்களுடைய அபராதத்தைப் பற்றிய மற்ற முக்கியமான தகவல்களும் இருக்கும். உங்களுடைய CFCS-ஐ உங்களால் விளங்கிக்கொள்ள இயலவில்லை என்றால், fines.vic.gov.au/contact-us எனும் வலைத்தலப் பக்கம் மூலமாக நீங்கள் எம்முடன் கூடிய விரைவில் தொடர்புகொள்ளவேண்டும்.

நீதிமன்ற அபராதம் ஒன்றைப் பற்றி நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால்:

  • உங்களுடைய அனுமதிப்பத்திரம் அல்லது வாகனப் பதிவு இடைநிறுத்தம் செய்யப்படக்கூடும்
  • உங்களுடைய வங்கிக் கணக்கு அல்லது சம்பளத்தில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படலாம்
  • உங்கள் மீது எழுத்தாணை ஒன்று பிறப்பிக்கப்படலாம், மற்றும் இதில் 'அமைதிக் காவலர்' (Sheriff) ஈடுபாடு கொள்ளக்கூடும். உதாரணத்திற்கு, அமைதிக் காவலர் உங்களுடைய வாகனத்தைக் கையகப்படுத்தி விற்கலாம்.

அமைதிக் காவல'(Sheriff)ரைப் பற்றி

'அமைதிக் காவலர்' (Sheriff) என்பவர் பின் வருவனவற்றிற்கான எழுத்தாணைகளைப் பிறப்பிப்பதற்கான பொறுப்பதிகாரம் உள்ள விக்டோரிய மாநில உயர் நீதிமன்ற அதிகாரியாவார்:

  • 'விக்டோரிய அபராதங்கள்' (Fines Victoria) -உடன் பதிவு செய்யப்பட்டுள்ள செலுத்தப்படாத அபராதங்கள்
  • நீதிபதி அல்லது நீதவான் ஒருவரால் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டு செலுத்தப்படாமல் இருக்கும் அபராதங்கள்.

உங்களுடைய அபராதத்தினைப் புறக்கணித்துவிட்டு நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தால், உங்களுக்கெதிராக எழுத்தாணை ஒன்று பிறப்பிக்கப்படக்கூடும்.

அமைதிக் காவலருடைய அதிகாரிகள் உங்களுடைய வீட்டிற்கோ, நீங்கள் தொழில் புரியும் இடத்திற்கோ வரலாம், அல்லது உங்களுடைய எழுத்தாணையைப் பற்றிப் பேசுவதற்காக சாலைத்தடை ஒன்றில் நீங்கள் நிறுத்தப்படலாம். அமைதிக் காவலருடைய அதிகாரிகள் உங்களுடைய வாகனம் நகராத வகையில் அதன் சக்கரங்களைப் பூட்டவும் கூடும்.

அமைதிக் காவலருடைய அதிகாரிகள் குறித்து நீங்கள் அஞ்சவேண்டாம். செலுத்தப்படாமல் இருக்கும் உங்களுடைய அபராதத்தினைப் பற்றிய ஏற்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள அவர்கள் உங்களுக்கு உதவ விரும்புவார்கள், மற்றும் உங்களை அவர்கள் மரியாதையுடன் நடத்துவார்கள். உங்களுக்குள்ள தெரிவுகளைப் பற்றி அவர்கள் உங்களுக்கு விளக்கிச் சொல்வார்கள், மற்றும் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள உங்களுக்கு உதவுவார்கள்.

தேவைப்பட்டால், பின் வருவனவற்றைச் செய்யும் அதிகாரம் அமைதிக் காவலருடைய அதிகாரிகளுக்கு உண்டு:

  • உங்களுடய வாகனம் போன்ற உங்களுடைய உடைமைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றைக் கையகப்படுத்த, விற்க
  • உங்களுடைய வாகனத்தின் சக்கரங்களை இறுக்கிப் பூட்ட, அல்லது உங்களுடைய வாகனத்தைத் தடுப்பில் வைக்க
  • நீதவான் முன்பாக நீங்கள் கொண்டுவரப்படுவதற்காக உங்களைக் கைது செய்ய.

 

Return to the top